𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

HUTCH இன் 26 ஆவது ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பணப்பரிசில்கள் வெகுமதியளிக்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, 26 ஆவது Hutch தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவரீதியான நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது முதல் பரிசு எம்.எஸ்.கிர்தி சமன்மலி – மொரவக்க, இரண்டாம் பரிசு வை.கே.பி.பி.சேனாநாயக்க – கொழும்பு 05 மற்றும் மூன்றாம் பரிசு பி.எம்.ஏ.எஸ். ஸ்ரீபாலி – கித்துல்ஹிட்டியாவ, ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இப் பரிசுகளை Hutch இன் பிற்கொடுப்பனவு சேவைகளுக்கான பொது முகாமையாளர் இந்துனில் பெர்னாண்டோ வழங்கி வைத்தார்.

மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முன்னணி விநியோகஸ்தரும், வினா விடை சேவைக்கான சேவை பங்காளராக செயல்பட்டதுடன், இதற்கான தளத்தை வழங்கிய hSenid Software International இன் துணை நிறுவனமான Beyond M உடன் இணைந்து HUTCH நிறுவனமானது ஏற்பாடு செய்த ‘தெனுமை மில்லியனையை’ ஓர் ஆறு மாத கால போட்டியாகும். பாவனையாளர்கள் SMS, இணையத்தளம் அல்லது தெனுமை மில்லியனையை செயலியூடாக இதில் பங்கேற்கக் கூடியதாக இருந்தது.

‘தெனுமை மில்லியனையை’ பாரம்பரிய வினாடி வினா போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஏனெனில், இது பொது அறிவை மேம்படுத்துவதற்கும், குதூகலமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளமாகும். மிக முக்கியமாக, இது ஒவ்வொரு போட்டியாளருக்கும் சமமான வெற்றி வாய்ப்புகளை வழங்கும் நன்கு வெகுமதியளிக்கும் போட்டியாகும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பாவனையாளர்கள் WIN என டைப் செய்து 6633 க்கு SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் அல்லது play storeலிருந்து அப்ளிகேஷனை தரவிறக்குவதன் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம். இந்த சேவையை Subscribe செய்ததன் பின்னர், பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 10 கேள்விகளைப் பெறுவார்கள், மேலும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் அவர்கள் புள்ளிகளைச் சேகரிக்க முடியும். ஆறு மாதங்களின் முடிவில் குலுக்கல் முறையின் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதுடன், பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு பாவனையாளருக்குமான வெற்றிவாய்ப்புகளை தீர்மானிக்கும்.

‘தெனுமை மில்லியனையை’  போட்டியின் 27 வது தொகுப்பானது 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைவதுடன், 28 ஆவது தொகுப்பானது மே 1 ஆம் திகதி முதல் மேலும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களைத் தேடும் பணியை ஆரம்பிக்கும்.