Huawei நிறுவனத்தின் வருமானம் 2019 ஆம் ஆண்டு 123 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டது: கடந்த ஆண்டை விட 19.1% அதிகரிப்பு
Huawei நிறுவனம் தனது திடமான வணிக செயற்பாடுகளை விபரிக்கும், 2019 ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம், Huawei நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை வருமானம் 2019 ஆம் ஆண்டில் 123 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 858.8 பில்லியன்) தொட்டதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.1% அதிகரித்துள்ளது; அதன் நிகர இலாபம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 62.7 பில்லியன்) அடைந்தது; அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான பணப்பாய்ச்சல் 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (CNY 91.4 பில்லியன்) உச்சத்தை அடைந்ததுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.4% அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் தனது நீண்டகால, தொடர்ச்சியான முதலீட்டின் ஒரு அங்கமாக Huawei தனது 2019 ஆண்டுக்கான வருமானத்தில் 15.3% – அல்லது 18.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 131.7 பில்லியன்) – மீண்டும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்தது. கடந்த தசாப்தமாக இதன் மொத்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான செலவீனம் தற்போது 85.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 600 பில்லியன்) விட அதிகமாகும்.
2019 ஆம் ஆண்டு Huawei இற்கு அதி சிறப்பான ஆண்டாக அமைந்ததாக, Huawei இன் Rotating Chairman, Eric Xu தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மிகப்பாரிய வெளிப்புற அழுத்தத்தை மீறி, எங்கள் அணியானது எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை சேர்க்கும் ஒரே நோக்குடன் முன்னோக்கிச் சென்றது. அவர்களிடமிருந்தும், அதே போல் உலகெங்கிலும் உள்ள எங்கள் பங்காளர்களிடமிருந்தும் மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள நாங்கள் கடுமையாக உழைத்தோம். வணிகம் திடமாக தொடர்கின்றது,” என்றார்.
2019 ஆம் ஆண்டில், Huawei நிறுவனத்தின் காவி (carrier) வணிகம், 5G வலையமைப்புகளின் வணிக ரீதியான அறிமுகப்படுத்தலை வழிநடத்தியது. மேலதிக வணிக ரீதியான ஏற்றுக்கொள்ளல் மற்றும் 5G செயற்படுத்தலில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், நிறுவனம் உலகளவில் காவிகளுடன் இணைந்து 5G கூட்டு புத்தாக்க மையங்களை நிறுவியுள்ளது. Huawei இன் RuralStar தள மைய (base station) தீர்வுகளானது பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் வலையமைப்பு சிக்கல்களுக்கு வெற்றிகரமாக தீர்வளிக்கின்றன. இந்த தீர்வுகள் 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பயன்படுத்தப்படுவதுடன், பின் தங்கிய பகுதிகளில் வாழும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மொபைல் இணையத்தை கொண்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு, Huawei இன் காவி வணிகம் (carrier business) மூலமான வருமானம் 42 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 296.7 பில்லியன்) தொட்டதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.8% அதிகரிப்பாகும்.
Huawei இன் enterprise business பல தொழில்துறைகளில் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் உருமாற்றத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதுடன், நிறுவனமானது டிஜிட்டல் உலகுக்கான அடித்தளத்தை இடுவதற்கு உதவி புரிகின்றது. உலகளவில், 700 க்கும் மேற்பட்ட நகரங்களும், 228 போர்ச்சூன் குளோபல் 500 (Fortune Global 500) நிறுவனங்களும் தங்கள் டிஜிட்டல் உருமாற்ற பங்காளராக Huawei நிறுவனத்தையே தெரிவு செய்துள்ளன. புத்திசாலித்தனமான உலகம் செழுமையடைய வளமான மண்ணை பண்படுத்தும் நோக்குடன் 2019 ஆம் ஆண்டில் Huawei தனது கணனி மூலோபாயத்தை அறிவித்தது. இந்த மூலோபாயத்தின் ஓர் அங்கமாக Huawei நிறுவனம், உலகின் வேகமான செயற்கை நுண்ணறிவு புரொசசரான (AI processor) Ascend 910 மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி கிளஸ்டரன (AI training cluster) Atlas 900 ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டில் Huawei enterprise business இன் விற்பனை வருமானம் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொட்டத்துடன், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 8.6 வீத அதிகரிப்பாகும்.
Huawei இன் consumer business தொடர்ச்சியாக உறுதியான வளர்ச்சியை கண்டுவருவதுடன், ஆண்டுக் காலப்பகுதியில் 240 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தனிநபர் கணனிகள், டெப்லட் சாதனங்கள், அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் திரைகள் உள்ளிட்ட அனைத்து சாதனங்கள் மற்றும் நிலைகளிலும் எல்லையற்ற செயற்கை நுண்ணறிவு வாழ்க்கை (AI Life) கட்டமைப்பை உருவாக்குவதில் மேலும் வளர்ச்சியை கண்டுள்ளமையை நிறுவனம் அறியத்தருகின்றது. 2019 ஆம் ஆண்டு Huawei இன் consumer business 66.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை ((CNY 467.3 பில்லியன்) தொட்டதுடன். இது கடந்த வருடத்தை விட 34% அதிகரிப்பாகும்.