‘Honda தவசே லக்சபதி’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டத்தில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூபா. 100,000 பணப்பரிசினை வென்றுள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெற்றியாளர்களுக்கு அவர்களின் பணப்பரிசு, கொழும்பு ரத்தனபிட்டியவில் உள்ள Stafford Motors வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு சக்கர வாகங்களை கொள்வனவு செய்தவர்கள் மட்டுமே, அந்த நாளுக்கான குலுக்கலில் உள்வாங்கப்படும் முறையின் கீழேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதல் இருபது வெற்றியாளர்கள் ஜனவரி 17 முதல் பெப்ரவரி 14 வரையான காலப்பகுதியில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர) நாளாந்த குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டனர்.
Stafford Motors Co. வின் நிறைவேற்று அதிகாரிகளான Dr. Kalinga Kaluperuma, CEO/Managing Director, Charaka Pere-ra, Director/COO, Damitha Jayasundara, General Manager (Spare Parts) மற்றும் Sampath Wasalamudali, Senior Manager, ( Motor Bike Services and Field Training) ஆகியோர் பரிசு வழங்குதலை நினைவுகூறும் முகமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Stafford Motor (Pvt) Ltd நிறுவனத்தின் CEO/Managing Director Charaka Perera, வெற்றியாளர்களுக்கான பரிசு வழங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், “எங்கள் பயணத்தில் எமக்கு ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான பிரதிபலன்களை வழங்கும் Stafford Motors இன் ஒட்டுமொத்த நோக்கத்தின் உண்மையான எடுத்துக்காட்டாக இந்த குலுக்கலின் வெற்றியாளர்கள் திகழ்கின்றனர்,” எனத் தெரிவித்தார்.
தினசரி வெற்றியாளர்களில் ஒருவரான எஸ்.குமாரி தனது வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். “நான் எனது வாழ்க்கையை மாற்றும் சத்திர சிகிச்சையை எதிர்கொண்ட நிலையில் இந்த பரிசுத் தொகையை வென்றேன் என்பது உண்மையில் அதிசயமாக இருந்தது. ஏனெனில், இது மிகவும் அவசியமான சந்தர்ப்பத்தில் கிடைத்துள்ளது. இலங்கையின் மோட்டார் சைக்கிள் துறையின் மறுபெயராக திகழும் Honda மோட்டார் சைக்கிள்களை மாத்திரமே வாங்கும் படி எனது தந்தை எனக்கு அறிவுரை கூறியுள்ளதை நான் நினைவுகூறுகின்றேன்,” என்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போன வெற்றியாளர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.சுபோதினிக்கு இந்த பரிசுத் தொகையை அவரது வீட்டுக்கே விநியோகம் செய்ய Stafford Motors ஏற்பாடு செய்துள்ளது. தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், தனது Honda Dio ஸ்கூட்டரை மிகுந்த சிரமத்துடன் வாங்கியமையால், தனது வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
‘Honda தவசே லக்சபதி’ நாளாந்த குலுக்கல்கள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் மார்ச் இடம்பெறுகின்றது. இந்த குலுக்கலில் பங்குபெற, வாடிக்கையாளர்கள் தாம் இரு சக்கர வாகனத்தைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் கூப்பனை நிரப்பி, 0117672735 / 0117634735இற்கு அன்றைய தினமே தொலைநகலில் அனுப்ப வேண்டும் அல்லது தெளிவாக படம்பிடித்து [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்ப முடியும். இந்த ஊக்குவிப்பு திட்டமானது மொத்தமாக 50 வெற்றியாளர்களை தெரிவு செய்யவுள்ளது. அவர்களிடையே தலா ரூபா.100,000 வீதம் மொத்தமாக ரூபா. 3 மில்லியன் பரிசுத் தொகை பிரிக்கப்படவுள்ளது. தற்போது 20 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
.தினசரி குலுக்கல் Honda Sri Lankaவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படுவதுடன், வெற்றியாளர்கள் தினமும் பல வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிகள், பத்திரிக்கைகள் மூலமாகவும் அறிவிக்கப்படுவார்கள்.
1977 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Stafford Motors நாட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றென்பதுடன், கடந்த 42 வருடங்களாக மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகின்றது. அவர்களது மோட்டார் சைக்கிள் தயாரிப்பு வரிசையானது CB Hornet, CB160X, CB Shine மற்றும் CD Dream ஆகியனவற்றையும், அவர்களது ஸ்கூட்டர் வரிசையானது Grazia, Activa-I மற்றும் Dio ஆகியவற்றை உள்ளடக்கியதுடன், இவையே இலங்கையில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களாகும்.