𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

AR வெள்ளை அறிக்கை வெளியிடும் Huawei, 5G + AR இன் நன்மைகள் குறித்தும் விவரிக்கின்றது

5G + ஆக்மண்டட்ரியாலிட்டிக்கான (AR) உச்சிமாநாட்டில், Huawei Carrier BG இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான பொப் கெய்,  5G + AR, கனவுகளை நிஜமாக்கல் தொடர்பில்  சிறப்புரையாற்றியிருந்தார். இந்த உரையில், 5G ஆனது AR ஐ மாற்றுவதுடன், AR ஆனது 5G ஐ பிரகாசிக்கச் செய்யும் என்றும் கெய் தெரிவித்தார். சாதனங்கள், செயலிகள் மற்றும் வலையமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ARதொழில்துறை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் AR Insight  மற்றும் Application Practice  வெள்ளை அறிக்கை வெளியீடு தொடர்பிலும் அவர் அறிவித்தார். வளமான 5 ஜி + AR அமைப்புக்கு முழு தொழிற்துறையும் இணைந்து பணியாற்ற கெய் அழைப்பு விடுத்தார்.

2025 ஆம் ஆண்டில் AR சந்தை 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்டதாக இருக்கும் என்று Huawei மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்கள் கணித்துள்ளன. “AR முதலில் முக்கியத்துவம் பெற்ற ஐந்து தொழிற்துறைகளான: கல்வி, சமூக வலையமைப்பு, ஷொப்பிங், பயணம் மற்றும் கடற் பயணம் மற்றும் கேமிங்” போன்றவற்றில் பெருமளவில் பயன்படுத்தப்படும். “AR இனால் உண்மையிலேயே பௌதீக மற்றும் டிஜிட்டல் உலகங்களின் ஒருங்கிணைப்பை செயல்படுத்த முடியும், இது கனவுகளை நனவாக்குகிறது.”

இந்த நிகழ்வில்,  Huawei  நிறுவனமானது AR இனைப் பயன்படுத்துவது தொடர்பிலான விடய ஆய்வினையும் கெய் பகிர்ந்திருந்தார். COVID-19 காரணமாக, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களால் Huawei இனை நேரடியாக பார்வையிட முடியவில்லை, எனவே Huawei  தனது முன்னணி தயாரிப்புகளையும் தீர்வுகளையும் ஒன்லைனில் செயல் விளக்கமளிக்க AR ஐப் பயன்படுத்துவதுடன், இதன் மூலம் தொடர்பாடலையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுகின்றது. 5G களையும் விரைவாக விநியோகிப்பதற்காக Huawei, AR ஐப் பயன்படுத்துவதுடன், விநியோக திறனையும் பெரிதும் மேம்படுத்துகின்றது.

இந்த நிகழ்வில், Huawei, ARஐ எவ்வாறு உருவாக்குகிறது என்பதை கெய் நிரூபித்தார். 2D புகைப்படத்தை டிஜிட்டல் 3D மொடலாக மாற்ற Huawei Air Photo தனித்துவமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது AR 3D character modeling இனை கணிசமாக எளிதாக்குகிறது. மொபைல் சாதனங்களை சார்ந்த நிறுவனத்தின் AR மேம்பாட்டு தளமான Huawei AR Engine இனையும் கெய் அறிமுகப்படுத்தினார். Huawei AR Engine உடன், டெவலப்பர்கள் AR விளைவுகளை உருவாக்க 10 வரிகளை மட்டுமே எழுத வேண்டும், இது AR செயலிகளின் வளர்ச்சியின் செயல்திறனை பெரிதும் அதிகரிக்கும்.

கைத்தொழில் உற்பத்தி, இலத்திரனியல் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வீட்டு அலங்காரங்கள், கலாசாரம், விளையாட்டு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் AR பிரதிநிதித்துவப்படுத்தும் ICT சேவைகளை ஏற்றுக்கொள்ள முடியும். AR செயலிகள் டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு முக்கிய இயந்திரமாக மாறியுள்ளன, மேலும் அவை உற்பத்தி முறைகளையும், நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் ஆழமாக மாற்றும். தனது உரையை முடிக்கும்போது கெய் தெரிவித்ததாவது, ​​”நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள்; நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள். AR இன் வளர்ச்சிக்கு முழு தொழிற்துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் வளமான 5G + AR பெறுமதி சங்கிலியை உருவாக்க வேண்டும்.

AR மற்றும் 5G ஆகியவை சரியான நேரத்தில் இணைகின்றன. 5 ஜி AR ஐ மாற்றுகிறது, மேலும் AR 5G ஐ ஒளியூட்டுகின்றது.”

பட விளக்கம்

Huawei Carrier BG  இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி பொப் கெய் உரையாற்றுகையில்