𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான தங்க நெக்லஸ்கள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களை வெகுமதியளிக்கும் ‘Rani Sandalwood’

ஒவ்வொரு வாரமும் தங்க நெக்லஸ்கள் மற்றும் உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள்!

Swadeshi Industrial Works PLC நிறுவனம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கென வாராந்தம் 22 கரட் தங்க நெக்லஸ் மற்றும் மேலும் பல பெறுமதியான பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்தவொரு ராணி சந்தன சவர்க்கார வெற்று பெட்டிகள் இரண்டினை தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலகத்தினை குறிப்பிட்டு  “ராணி சந்துன் வாசனா வரம” தபால் பெட்டி 04, கந்தானை என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 22 கரட் தங்க நெக்லஸ்கள் 6,  கேஸ் குக்கர்கள் 6, ரைஸ் குக்கர்கள் 6 மற்றும் 84 பரிசுப் பொதிகளை  6 வாரகாலப்பகுதிக்குள் வெற்றிபெறும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியுமென, அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஊக்குவிப்புத் திட்டமானது  2020 நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வெற்றியாளர்கள் வாராந்த குலுக்கலின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  Rani Sandalwood பேஸ்புக் பக்கத்திற்கு விஜயம் செய்வோர் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

சந்தையில் உள்ள அசல் சந்தனத்தினாலான சவர்க்காரமான ராணியின் நம்பிக்கைக்குரிய நுகர்வோர் தளத்திற்கு வெகுமதியளிப்பதே இந்த ஊக்குவிப்பின் நோக்கமாகும் என  Swadeshi Industries இன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

“ராணி சந்தன சவர்க்காரத்தின் முக்கிய மூலப்பொருளான சந்தனம் அதன் சுத்தப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது சருமத்தை மென்மையாக்க உதவுவதுடன், ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் பாதுகாக்கும். இந்த ஊக்குவிப்பானது இந்த அம்சங்களைப் பற்றிய சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது,” என்று அந் நிறுவன ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Rani Sandalwood எப்போதும் சந்தனத்தின் சிறப்பு நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகளை அறிந்த உண்மையான அழகான பெண்களுடன் தொடர்புடையது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் இருக்கும் சிறந்த தரமான மற்றும் அசல் சந்தன மர சவர்க்காரமாக ராணியை அவர்கள் எப்போதும் நம்புகிறார்கள். ராணி சந்தன அழகு சோப்புகளின் இராணி என புகழ்பெற்றது.

1941 ஆம் ஆண்டில் ‘ராணி’ வர்த்தகநாமம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சந்தன அழகு பராமரிப்பு பிரிவில் யாராலும் மிஞ்ச முடியாத முதலிடத்தை கொண்டிருப்பதற்கான  தனித்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் பல வெளிநாட்டு சந்தைகளிலும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையில் மூலிகை சவர்க்காரத்தை தயாரித்த முதல் இலங்கை நிறுவனம் Swadeshi Industrial Works ஆகும். இந்த நிறுவனத்தின் புதுமையான மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான முன்னேற்றங்கள் முதல் சந்தன அழகு சவர்க்காரம், முதல் மூலிகை அழகு சவர்க்காரம் மற்றும் முதல் மூலிகை குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் உள்ளிட்ட பலவற்றுக்கு வழிகோலியுள்ளது. Swadeshi இன் முதற்தர வர்த்தகநாமங்களில் Khomba Herbal, Rani Sandalwood, Khomba Baby, Little Princess, Perlwite, Lak Bar, Safeplus, Lady, Black Eagle Perfume மற்றும் Swadeshi Shower Gel வரிசை ஆகியன அடங்குகின்றன.

The Swadeshi Industrial Works PLC  நிறுவனம் ISO 9001 : 2015  சான்றளிக்கப்பட்டது.  சிறந்த மூலிகைகளின் கலவையை மட்டுமே பயன்படுத்துவதுடன் அனைத்து உள்ளீடுகளும் விரிவாக ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. மேலும், தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்த முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன மற்றும் தயாரிப்புகள் அனைத்தும் 100% தாவரத்தினாலானதுடன், விலங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்டவை அல்ல