𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட Hutch ரீசார்ஜ் இற்கும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த சந்தைப்படுத்தல் திட்டத்தின் மாபெரும் பரிசாக Mahindra வாகனமும், வாராந்த பரிசுகளாக Yamaha மின் பிறப்பாக்கிகள், Rhoda ஸ்மார்ட் மின்சார மோட்டார் சைக்கிள்கள், Samsung 5G Ready ஸ்மார்ட்போன்கள், Samsung ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், Airpods மற்றும் மின்கலத்தைக் கொண்ட WI-FI Router போன்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இவை அனைத்து பரிசுகளும் 8 வார காலப்பகுதியில் வழங்கப்படவுள்ளன.

மின் பிறப்பாக்கிகள், ஸ்மார்ட் மின்சார மோட்டார் சைக்கிள்கள், மற்றும் மின்கலத்துடனான Wfi Router போன்ற பரிசுகள், இன்றைய சவால்களுக்கு மத்தியில் வீடுகளிலோ அல்லது வணிகத் தளத்திலோ மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, மின்சார ஸ்மார்ட் மோட்டார் சைக்கிள்கள் 4 மணி நேர சார்ஜிங் மூலம் 60 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியன. மின்பிறப்பாக்கிகள் ஏனைய எரிபொருளைக் காட்டிலும் மிக எளிதில் அணுகக்கூடிய பெற்றோல் மூலம் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மின்கலத்துடனான Wfi Router ஆனது, மின் வெட்டு வேளையில் 6 மணி நேரம் வரை வேலை செய்ய அல்லது கற்றலைத் தடையின்றி தொடர வழி வகுக்கின்றது. புத்தம் புதிய Mahindra SUV ஆனது, வாகனங்களின் விலைகள் ஒரு போதுமில்லாதவாறு உச்சத்தில் உள்ள வேளையில், புத்தம் புதிய வாகனங்கள் சந்தையில் மிகவும் குறைவாக இருக்கும் நேரத்திலும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

HUTCH சரியான சூறாவளி ஊக்குவிப்புத் திட்டமானது, அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்கும் ‘கட்டணமற்ற’ ஒரு திட்டமாகும். ஒவ்வொரு ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் இற்கும் ஒரு பரிசுக்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனவே அதிகளவான ரீசார்ஜ்கள் மூலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

முந்தைய எடிசலாட் செயல்பாட்டுடன் இணைந்ததில் இருந்து உயர்தர புரோட்பேண்ட் வலையமைப்பு அனுபவத்தை வழங்கி வருகின்ற, புதிதாக பரிணாமம் அடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Hutch, நாடு தழுவிய 4G வலையமைப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், சந்தையில் ஸ்மார்ட்டான, கட்டுப்படியான பொதிகளை வழங்கி வருகின்றது. Hutch இன் முக்கிய கொள்கையான மக்களின் வாழ்வில் சாதகமான மற்றும் நம்பிக்கையான மாற்றங்களைச் செய்வது தொடர்பில் அது தனது பயணத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.