École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1979 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட EFIC, இலங்கையில் 4 தசாப்தங்களுக்கும் மேலாக பிரெஞ்சு கல்வியில் முன்னோடியாக இருந்து வருகின்றது. இது பிரெஞ்சு வெளியுறவு அமைச்சின் கீழ் இயங்கி வருவதுடன், பிரெஞ்சு கல்வி அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்டது.
வெளிநாட்டிலுள்ள பிரெஞ்சு கல்விக்கான முகவராண்மையான ““Agence pour l’Enseignement Français à l’Etranger” (AEFE)” இனாலும் இந்த பாடசாலை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. AEFE என்பது பாடசாலைகள் மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் உறுதியான வலையமைப்பாகும், இது பிரெஞ்சு ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது. மேலும், இது 139 நாடுகளில் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவின் கீழ் சுமார் 522 பாடசாலைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கல்வி வலையமைப்பாக இது திகழ்வதுடன், உலகெங்கிலும் 370,000 மாணவர்களுக்கு கல்வி மேன்மையை வழங்கும் புகலிடமாகவும் உள்ளது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டு மாணவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், கொரியா, அசர்பைஜான், துருக்கி, பெல்ஜியம், பிரித்தானியா, மாலைதீவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை EFIC வரவேற்றுள்ளதுடன், பல்வேறு கலாசாரங்கள், மொழியியல் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மத்தியில் மாணவர்கள் வளர உதவுவதுடன், அடையாளங்கள் மற்றும் வேறுபாடுகளுக்கு மரியாதை செய்யும் பன்முகக் கலாசார சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.
‘’எங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கற்றலுக்கான சூழலை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பார்வையாகும். குறைந்த அடர்த்தியான மாணவர் தொகையானது ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ஒரு குழந்தை ஒரு மொழியில் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டுமானால், மிகச் சிறிய வயதிலேயே அம்மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. முதன்மை பாடங்களாக பல மொழிகள் கற்பிக்கப்படும் சூழலில் வளர்வது மாணவர்கள் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற வழி வகுக்கின்றது. மேலும் அவர்களின் உயர் கல்விக்கான பல வழிகளையும் உருவாக்குகின்றது. பாலர் பாடசாலையிலிருந்து பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கற்க மாணவர்களை அனுமதிப்பது, சிறு வயதிலிருந்தே சரளமாக பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பேசவும் சிந்திக்கவும் கற்றுக்கொள்ள உதவுகிறது,’’ என French International School of Colombo / Ecole Francaise Internationale de Colombo (EFIC) இன் அதிபர் Stéphanie Guillet தெரிவித்தார்.
பாலர் பாடசாலையிலிருந்து EMILE பிரெஞ்சு / ஆங்கில கல்வி முறையை EFIC ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு மொழியியல் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தை ஓர் ஆதரவான சூழலில் பெற உதவுகிறது. இந்த திறந்த அமைப்பு முறைமையானது அறிவாற்றல் வளர்ச்சி போன்ற எண்ணற்ற நன்மைகளை உருவாக்குவதுடன், மாணவர்களில் சிந்தனை முறைகளை மேம்படுத்துகிறது.
“உள்ளடக்கம் மற்றும் மொழி ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல்” (CLIL) இற்கான பிரெஞ்சு அணுகுமுறையே EMILE (Enseignement d’une Matière par l’Intégration d’une Langue Etrangère) ஆகும். இது விஞ்ஞானம், இசை, விளையாட்டு மற்றும் கலை போன்ற பாடங்களை இரு வெவ்வேறு மொழிகளில் கற்பிக்கிறது. ஓர் ஆங்கிலம் பேசும் ஆசிரியரும், ஒரு பிரெஞ்சு பேசும் ஆசிரியரும் ஒரே பாடங்களை அருகருகே நடாத்துவதுடன், அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையடைச் செய்கின்றனர். இந்த முறை மாணவர்களின் திறன் மட்டங்களை மேம்படுத்த உதவும் அதேவேளை மாணவர்கள் உலகிற்கு திறந்த மனப்பான்மையுடன் முன்னேற அனுமதிக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் உலகளவில் கற்பிப்பதற்கான மிகவும் வெற்றிகரமான முறையாக EMILE நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், 2015 முதல் EFIC இல் நடைமுறையில் உள்ளது.
EFIC, மாணவரின் ஆங்கில மொழி செம்மையாக்கம் செய்யப்படுவதனை உறுதிசெய்வதுடன், தரம் 2 இல் இருந்து அனைத்து மாணவர்களும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சான்றிதழ் பரீட்சைகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாவை ( Cambridge University certification exams and Diploma of English as a Foreign Language (DEFL), வெளிநாட்டு மொழியாக எடுக்குமாறு பரிந்துரைக்கிறது. பிரெஞ்சு தேசிய பாடத்திட்டத்துக்கு மதிப்பளிக்கும் ஒரு புதுமையான கற்பித்தல் அணுகுமுறையை EFIC நம்புகிறது, அதே நேரத்தில் அமைந்துள்ள நாட்டின் கலாசார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. கல்விக்கான இந்த அணுகுமுறை நிச்சயமாக மாணவர்களிடையே திறந்த மனப்பான்மையை உருவாக்க உதவுகிறது. EFIC இன் பீடம் மிகவும் திறமையான மற்றும் தகுதிவாய்ந்த ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், பிரெஞ்சு தேசிய கல்வி அமைச்சின் நெறிமுறையின் கீழ் பயிற்றப்பட்டது.
மாணவர்கள் 6 ஆம் வகுப்பை அடைந்ததும், EFIC அதன் மாணவர்களை , ஐரோப்பாவிலும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளிலும் வாழ்நாள் முழுவதுமான கற்றல் வழங்கும் முன்னணி வழங்குநரான CNED (Centre of National Distance Learning) இன் உயர்நிலைப் பாடசாலை கல்விக்கு இயலுமைப்படுத்துகின்றது. EFIC இல் பாடசாலைக் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை முன்னெடுக்கப்பட முடியுமென்பது, இது “la Terminale’ ஆகும். பிரான்சில் உள்ள ஒவ்வொரு “bachelier” க்கும் சாத்தியமான தொழில்வாழ்க்கைப் பாதைகளை, உலகின் முதற்தர பல்கலைக்கழகங்களில் தர நிலைப்படுத்தப்பட்டுள்ள 3,500 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ‘’Grandes Ecoles’’இல் , அமைத்துக்கொடுப்பதன் மூலம் உயர் கல்வியைப் பின்தொடர்வதற்கு சிறந்த வழி ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது. இதனுடன் சேர்த்து, பிரான்ஸில் கற்பதற்கான விசா வைத்திருப்பதானது ஐரோப்பாவை ஆராய்வதற்கும் பல்வேறு கலாசாரங்களையும் மரபுகளையும் கண்டறிய ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
கூட்டு முயற்சிகள் மற்றும் நல்ல நகைச்சுவையை பரப்புவதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள ஒரு பாடசாலையாக EFIC மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நெருக்கமான உறவைப் பேணுவதுடன் பாடசாலைக் கட்டணம் மற்றும் மாணவர் விவகாரங்கள் தொடர்பான விடயங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. ஒரு குழந்தையை EFIC இல் சேர்ப்பது அந்த குழந்தைக்கு இலங்கையில் உள்ள ஐரோப்பிய தர நிலைகளில் கற்க வாய்ப்பளிக்கிறது.
செப்டெம்பர் மாதத்துக்கான EFIC மற்றும் மாணவர் உள்ளெடுப்பு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற: https://www.eficolombo.com/.