𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

இலங்கையின் இணக்கப்பாட்டு சூழலை மாற்றியமைக்கவுள்ள ‘COMPFIE’

இணக்கப்பாட்டுக்கான இந்தியாவின் முதற்தர நிறுவனமான Aparajitha Corporate Services Private Limited, அதன் உலகளாவிய இலத்திரனியல் ஆட்சி மற்றும் இணக்கப்பாட்டுக்கான தளமான ‘Compfie’ இனை, கொழும்பை தலைமையிடமாகக் கொண்ட 3W Consulting உடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் இணக்கப்பாட்டு நடைமுறைகளுக்கான சந்தையில் ‘Compfie’ இனை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கையானது, Aparajitha மற்றும்3W இடையிலான மூலோபாய பங்குடமைக்கான முதல் பாரிய அபிவிருத்தியைக் குறிக்கிறது.

Compfie என்பது கிளவுட் தளத்தில் அமைந்த ஓர் ஒன்லைன் இணக்க முகாமைத்துவ கருவியாகும். இது துறை / தொழில் சார்ந்த அறிவு மற்றும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு, கொள்கை நியமங்களின் இணக்க அளவீடுகளின் இணைப்பாக உலகளாவிய தரநிலைகளுக்கு இணைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நுண்ணறிவானது நிறுவனங்களுடன் இணைந்து டிஜிட்டல் மாற்றத்தை அடைவதற்கு எங்கள் அணிகளை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றது. மூலோபாயம் முதல் செயன்முறைகள் வரை தொழில்நுட்ப செயலாக்கம் முதல் ஒழுங்குமுறை மாற்றங்கள் வரை, நாட்டுக்குரிய சட்டங்கள், தளங்கள் மற்றும் முன், நடுத்தர மற்றும் பின் அலுவலகங்களின் இணக்க வெளியீட்டு நடத்தைகள் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பதற்கான முழுமையான பார்வையை எங்கள் பல்துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் கவனத்தில் கொள்கின்றன.

இந்த நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த, Aparajitha Corporate Service Private Limited இன் முகாமைத்துவ பணிப்பாளர் நாகராஜ் கிருஷ்ணன், “ஆட்சி சூழழானது வேகமாக மாறிக்கொண்டிருப்பதால், பெருநிறுவன ஆட்சி கலாசாரம் உலகளவில் நிறுவனங்களிடையே மேம்பாடடைந்து வருகின்றது.  ஒழுங்குபடுத்தல் மற்றும் சட்டரீதியான இணக்கப்பாடு பெரும்பாலான நிறுவனங்களால் அதிக ஆபத்தான பிரிவாகக் கருதப்படுவதால், எங்கள் தயாரிப்பு பலரால் வரவேற்கப்படும் தளமாக உள்ளது. Compfie என்பது எங்கள் உலகளாவிய இலத்திரனியல் -ஆட்சி இணக்க தளமாகும், இது பொருந்தக்கூடிய ஒழுங்குபடுத்தல் இணக்கப்பாட்டு அறிவை மாற்றி நிறுவனங்களின் இணக்கப்பாட்டு செயல்திறனை முன்னெடுக்க உருவாக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒழுங்குபடுத்தல் இணக்கப்பாட்டு அபாயங்களினால் ஏற்படும் கவலையை நீக்கக் கூடிய ஆபத்தை குறைக்கும் கருவியாக Compfie செயல்படுகிறது. Aparajithaவின் 3W உடனான இலங்கைக்கான மூலோபாய பங்குடமையானது நாட்டில் இணக்கப்பாட்டு கலாசாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  இலங்கையில் 1800 கோடிக்கும் அதிகமான இதன் சந்தைப் பங்கு, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கும். அதே நேரத்தில் நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், ITES அபிவிருத்திக்கும் பங்களிக்கும்,” என்றார்.

Compfie வெற்றிகரமான வாய்ப்பினை வழங்குவதுடன், எதிர்காலத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் சபைகள் அவற்றின் உள்ளக செயல்முறைகளை எவ்வாறு திட்டமிடுகின்றன, கட்டமைக்கின்றன மற்றும் நெறிப்படுத்துகின்றன என்பதில் துரிதமாக மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு நாட்டின் / பிராந்தியத்தின் சட்டரீதியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் எல்லைக்குள் நிறுவன இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அடைவதற்கும் ஆபத்தைத் தணிப்பதற்கும் இணக்க நடைமுறைகளை நிர்வகிப்பதற்கும் Compfie இன் தொழில்நுட்ப தொகுப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“எதிர்பாராத உலகளாவிய சவால்கள் காரணமாக அனைத்து பல்தேசிய நிறுவனங்களிலும் ஆட்சியில் வலுவான மாற்றம் உள்ளது. BCP திட்டத்தின் ஒரு பகுதியாக மிகவும் வரையறுக்கப்பட்ட சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்ட அறிவுடன் நிறுவனத்தின் உள் கட்டமைப்புகளால் பெரும்பாலான இணக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இணக்கப்பாடானது இலங்கை முழுவதும் நுட்ப ரீதியாக நிறுவனங்களின் உள்ளக விவகாரமாக நிர்வகிக்கப்படுவதால், Aparajitha உடனான எங்கள் மூலோபாய பங்குடமையின் மூலம் நாட்டில் இணக்க சூழலை மாற்ற நாம் எதிர்பார்க்கின்றோம். இன்று இலங்கையில் தானியங்கி  GRC மென்பொருள் எதுவுமே இல்லையென்பதால், இது Compfie இற்கான புதுநிலையான சந்தையாகும். எங்கள் தயாரிப்பின் மூலம், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட இணக்க கலாசாரத்தினை ஏற்படுத்துவதற்கும், நாடு முழுவதும் இணக்க சந்தையில் பங்கை எளிதில் வெல்வதற்கும் நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம், “என 3W Consulting இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்டெபான் மொராயஸ் தெரிவிக்கின்றார்.

Aparajitha எதிர்வரும் மாதங்களில் சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய எதிர்பார்க்கிறது. இந் நிறுவனம் ஒரே நேரத்தில் ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சந்தைகளையும் ஆராய்ந்து வருகிறது.