𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Tamil

‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு, இலகுவாக கிடைக்கும், மிகவும் செயல்முறை சார்ந்த, பொருத்தமான மற்றும் மிகவும் கட்டுப்படியாகும் தீர்வாக இது காணப்படுகின்றது. எனவே, இந்த Huawei Support அப்ளிகேஷன், அதன் பாவனையாளர்களுக்கு ஒன்லைன் மூலமான உதவியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அப்ளிகேஷன், நேரத்தை மீதப்படுத்துவதன் மூலமும், செலவு குறைவாக இருத்தல் மற்றும் பாவனையாளர்களுக்கு இலகுவாக இருப்பதன் மூலமாகவும் Huawei சாதனத்தை வைத்திருப்போரின் வாழ்க்கைக்கு வசதியை எளிமையாக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. Huawei Support அப்ளிகேஷன் மூலம், பாவனையாளர்கள் சேவை மையங்களில் நேரத்தை வீணடிப்பதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் ஸ்மார்ட்போன் சிக்கல்களை பாதுகாப்பான மற்றும் வசதியான ஒன்லைன் ஆதரவு செயன்முறை மூலம் தொலைவிலிருந்து தீர்த்துக்கொள்ள முடியும்.

Huawei Support அப்ளிகேஷனானது, மென்பொருள் மற்றும் வன்பொருள் சிக்கல்களை அடையாளம் காணும் Smart Diagnosis,  திரை, சார்ஜிங் மற்றும் மின் நுகர்வு, அழைப்பு மற்றும் மொபைல் வலையமைப்பு, சிஸ்டம் செயலிழப்புகள், அப்ளிகேஷன் தவறுகள், கெமரா சிக்கல்கள், இணைப்பு, தொடர்புகள், மெசேஜ்கள் மற்றும் மேலும் பல பொதுவான சிக்கல்களுக்கான சுய சிக்கல்தீர்வு போன்ற முக்கிய செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் ஒரு சாதன மையமும் இடம்பெற்றுள்ளது, இது பாவனையாளர்கள் ஒரே அப்ளிகேஷனிலிருந்து பல சாதனங்களை Huawei கணக்கினுள் உள்நுழைந்து நிர்வகிக்க அனுமதிக்கிறது. வரவிருக்கும் நிகழ்வுகள், சிறப்பு சலுகைகள் மற்றும் சேவை நாட்கள் பற்றிய விபரங்களை வழங்கும் பரிந்துரைகளுக்கான ஒரு பகுதியும் இதில் அடங்குகின்றது.

“மென்பொருள் மற்றும் வன்பொருள் தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்குவதாக Huawei Support அப்ளிகேஷன் உள்ளது. இந்த அப்ளிகேஷன் வாடிக்கையாளர்களின் வசதிகளை முக்கியமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், எங்கள் ஒன்லைன் ஆதரவு சேவைகளுடன் இணையற்ற சேவையை வழங்க எங்கள் உதவி பணியாளர்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளனர். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை ஒன்லைன் ஆதரவைப் பெறவும், அப்ளிகேஷனின் அடிப்படையான வசதிகளைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறோம். எங்களது விசுவாசமான வாடிக்கையாளர்களின் மேம்பாட்டிற்கு இறுதியில் வழிவகுக்கும்,  ஒன்லைன் உதவி முயற்சிகளின் நடைமுறையை அபிவிருத்தி செய்யக் கூடிய நீண்டகால முயற்சியாக இதை நாம் அடையாளம் காண்கின்றோம்,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு  தெரிவித்தார்.

இதன் மற்றொரு முக்கியமான அம்சம், அருகிலுள்ள Huawei வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கண்டுபிடிக்கும் திறன் ஆகும். இது பாவனையாளர்களின் பழுதுபார்க்கும் நேரத்தை சேமிக்க உதவுவதுடன், விருப்பமான முறையின் ஊடாக, பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களை பழுதுபார்க்க அனுப்பமுடியுமென்பதுடன், அவை பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படும். இந்த அப்ளிகேஷனானது அசல் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களின் விலைகளை மிக வெளிப்படைத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதுடன், சாதனங்களை அப்டேட் செய்யும் தெரிவுடன் வருவதுடன், ஒவ்வொரு அப்டேட் தொடர்பிலும் விரிவான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei Support அப்ளிகேஷனை தற்போது புத்தம் புதிய பயனர் இடைமுகத்துடன் கூடிய Huawei AppGallery இல் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.