𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑𝒅𝒂𝒕𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒍𝒂𝒕𝒆𝒔𝒕 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒏𝒆𝒘𝒔

Business Sustainability

ஹிக்கடுவை பவளப் பாறைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை ஹிக்கா ட்ரான்ஸ் பை சினமன், பிளாஸ்டிசைக்கிள் மற்றும் MEPA அறிமுகம்

கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடனும் (MEPA)ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முயற்சி திட்டத்துடனும் இணைந்து ஹிக்கா ட்ரான்ஸ் பை சினமன், உல்லாச விடுதியை தொடுத்த கடற்கரை பகுதியை பராமரிப்பதற்கான ஒரு முயற்சியினை ஜனவரி மாதம் 30ம் திகதி, 2020 இல் அறிமுகப்படுத்தியது. இம் முயற்சியானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகளை வைப்பதையும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் (MEPA) தொடக்கி வைக்கப்பட்ட ´கடற்கரை பராமரிப்பாளர்´ திட்டத்தின் ஒரு பகுதியான கடற்கரையை தூய்மையாக்குவதற்கான நீண்ட கால நடவடிக்கைகளையும் நோக்காக கொண்டது.

கடற்கரைகளில் கரைசேர்ந்துவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிளாஸ்டிக் கழிவுகளினால் கடற்கரைகளில் சேர்கின்ற பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிகழ்வானது உள்ளூர் சட்ட அமுலாக்க அதிகாரிகள், ஹிக்கடுவை ஹோட்டல் சங்க அதிகாரிகள், டைவிங் நிலைய அங்கத்தவர்கள், ஹிக்கா ட்ரான்ஸ்ஸின் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள், சுற்றுப்புறங்களில் காணப்படும் கடற்கரை பராமரிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வோடு ஆரம்பமாகியது.

ஹிக்கடுவை கடற்கரை பகுதியினை ஒரு நாளிற்கு சுமார் 6,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிறார்கள் என்றும் நீண்ட வார இறுதி விடுமுறைகள் போதும் உச்ச விடுமுறை காலங்களின் போதும் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக பெருகும் என்றும் ஹிக்கா ட்ரான்ஸ்ஸின் செயல்பாடுகள் துறையின் பொது மேலாளர், திரு லங்கேஷ பொன்னம்பெருமா கூறினார்.

கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வுக்கும், உல்லாச விடுதிக்கு அண்மையில் வைக்கப்பட்டுள்ள 3 கடலாமை வடிவ பிளாஸ்டிக் சேகரிப்பு கூடைகளுக்கும் மேலதிகமாக ஹிக்கா ட்ரான்ஸின் ஊழியர்கள் பங்குபற்றியவர்களுடனும் தன்னார்வ தொண்டர்களுடனும் ஹிக்கடுவை பறைகளில் வசிக்கும் மீன்கள் மற்றும் காணப்படும் பவளக் கற்பாறைகள் குறித்த ஒரு குறிப்பு வழிகாட்டி ஒன்றினை பகிர்ந்து விழிப்புணர்வொன்றினை ஏற்படுத்தினர்.இந்நிகழ்வானது ஹிக்கா டிரான்ஸினால் ஏற்கனவே நடாத்தப்பட்டு வரும் அப்பிரதேச இளைஞர்களுக்கான பவள கற்பாறைகள் பராமரிப்பு தொடர்பான திட்டங்களுக்கு மேலதிகமானது ஆகும். அது மாத்திரமின்றி பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் வண்ணம், ´கைடட் ஸ்நோர்கெல்லிங்´ இனை சுற்றுச்சூழலுக்கு குறைந்தபட்ச தீங்கு விளைவிக்கும் வகையில் மிகவும் நிலையான ஒரு தொழில்முறை வணிகமாக அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒரு இளைஞர் நிகழ்வொன்றினையும் நடாத்தினர்.

இலங்கையின் பிளாஸ்டிக் மாசினை குறைப்பதை தனது நோக்காக கொண்டு, அதன் மேம்பாட்டிற்காக பிளாஸ்டிக் பாவனையை குறைத்தலை ஊக்கப்படுத்துவதோடு, பொறுப்பான கழிவகற்றலை ஆதரித்து மீள்சுழற்சி முறைகளை ஊக்கப்படுத்தும் பிளாஸ்டிசைக்கிளானது மேல் கூறப்பட்ட போன்ற திட்டங்களில் உடன் இணைந்து செயல்படுகின்றது.

பிளாஸ்டிசைக்கிளானது அண்மையில் அதன் சேகரிப்பு தொட்டிகள் வைக்கும் திட்டத்தில் 50 மெட்ரிக் டொன் பிளாஸ்டிக்கினை சேகரித்து பொறுப்பாக மீள்சுழற்சி செய்து ஒரு மைல் கல்லினை அடைந்தது. இத்திட்டத்தினை இலங்கையின் கடலோர பிரதேசங்களில் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபை, சினமன் ஹோட்டல்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து பிரதிபலிப்பதை நோக்காக கொண்டுள்ளதாக பிளாஸ்டிசைக்கிளின் செயல்பாடுகள் பிரிவின் முகாமையாளர் திரு. புத்திக்க முதுகுமாரன கூறினார்.

பிளாஸ்டிசைக்கிள் கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜே.கே.எச்) இன் சமூக தொழில் முயற்சி திட்டமாகும். 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜான் கீல்ஸ் குழு, 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜான் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 14 ஆண்டுகளாக இலங்கையின் ´மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்´ என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ. நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே. கே. எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக ´எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்´ நோக்கினை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு ஊக்கியாக ´பிளாஸ்டிசைக்கிள்´ ஊடாக செயற்படுகின்றது.